சாலைப் பயணங்களுக்கான உரிய பாதுகாப்பு நெறிமுறைகள் அனைவரும் தவறாமல் பின்பற்ற வேண்டும் - எடப்பாடி பழனிசாமி
சென்னை, 1 டிசம்பர் (ஹி.ச.) சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே அரசுப் பேருந்துகள் மோதியதில் 11 பேர் உயிரிழந்ததாகவும், 40க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது என அதிம
Eps


Tw


சென்னை, 1 டிசம்பர் (ஹி.ச.)

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே அரசுப் பேருந்துகள் மோதியதில் 11 பேர் உயிரிழந்ததாகவும், 40க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது என அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் இது குறித்து வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,

சிவகங்கை பேருந்து விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதுடன், மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் பூரண உடல்நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு தக்க நிவாரணம் அளிக்கவும், படுகாயமடைந்தோருக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

பேருந்து விபத்துகள் தொடரும் நிலையில், சாலைப் பயணங்களுக்கான உரிய பாதுகாப்பு நெறிமுறைகள் பேருந்து ஓட்டுநர்கள் மட்டுமன்றி, அனைவரும் தவறாமல் பின்பற்றி, பாதுகாப்போடு பயணங்களை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ