Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 1 டிசம்பர் (ஹி.ச.)
சென்னை கிண்டி ரேஸ் கிளப் நிலத்தில், மழை நீரை சேகரிக்கும் வகையில் குளங்கள் அமைக்கவும், சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கவும் தமிழக அரசுக்கு அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ரேஸ் க்ளப் நிலத்தில் தற்போதைய நிலையே தொடர வேண்டுமென்ற தனி நீதிபதி உத்தரவுக்கு எதிராக இரு நீதிபதிகள் அமர்வில் அரசு மேல்முறையீடு செய்தது.
கடந்த காலங்களில் மழை வெள்ளத்தால் சென்னையில் ஏற்பட்ட பாதிப்புகளை பார்க்கும் போது இது போன்ற திட்டங்கள் தேவை எனவும் அரசின் இந்த நடவடிக்கை மூலம் சுற்றுச்சூழல் சம நிலை ஏற்படுவதோடு, காற்று மாசுவை குறைக்கும் , காற்று மாசு என்பது வெறும் சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்னை மட்டுல்ல. பொதுமக்களின் உடல் நலன் சார்ந்த பிரச்னைகள் வரும் என தெரிவித்துள்ளனர்.
அரசு நிலத்தை குறிப்பிட்ட தனிநபர்கள், தங்களது தனிப்பட்ட தேவைகளுக்காக பயன்படுத்த அனுமதிப்பது மக்களின் நம்பிக்கையை சீர்குலைக்கும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / P YUVARAJ