Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 1 டிசம்பர் (ஹி.ச.)
கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டி பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன். மாற்றுத்திறனாளி ஆன இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
கடந்த 2004 ஆம் ஆண்டு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாற்றித்திறனாளிகளுக்கு தகுந்தார் போல் தனக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தர வேண்டி பதிவு செய்துள்ளார்.
ஆனால் தற்பொழுது வர இவருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை.
இவருக்கு பிறகு பதிவு செய்தவர்களுக்கெல்லாம் வேலை வாய்ப்பு கிடைத்து விட்டதாக கண்ணீர் மல்க தெரிவிக்கும் வேல்முருகன் இனிமேலாவது தனக்கு ஏதேனும் ஒரு வேலைவாய்ப்பை அரசு உருவாக்கி தர வேண்டும் என கண்ணீர் மல்க கேட்டுக் கொண்டுள்ளார்.
தற்பொழுது பெட்டிக்கடை ஒன்று வைத்து நடத்தி வரும் நிலையில் அதில் உறுதி வருமானம் கிடைக்காததால் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். அதனால் குழந்தைகளின் படிப்பு செலவு மருத்துவ செலவிற்கும் கூட மிகுந்த சிரமங்கள் ஏற்படுவதாகவும் தெரிவித்தார்.
கண்ணீர் மல்க இவர் மனு அளித்து கோரிக்கை விடுத்தது, அங்கிருந்து அனைவரையும் வருத்தத்தில் ஆழ்த்தியது.
இவர் ஏற்கனவே அரசு குடியிருப்பு வேண்டி பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / V.srini Vasan