Enter your Email Address to subscribe to our newsletters

கள்ளக்குறிச்சி, 1 டிசம்பர் (ஹி.ச.)
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள பழையனூர் கிராமத்தில் ஏர்கன் நாட்டுத் துப்பாக்கி வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அந்த தகவலின் பேரில் பழையனூர் கிராமத்திற்கு விரைந்த சங்கராபுரம் உதவி ஆய்வாளர் பிரதாப் குமார்,தலைமையிலான போலீசார் அருளப்பன் மகன் ஜேம்ஸ் பீட்டர் என்பவர் வீட்டில் தீவிர சோதனை செய்த போது சட்டத்திற்கு புறம்பாக பதுக்கி வைத்திருந்த 3 ஏர்கன் துப்பாக்கி மற்றும் 1 நட்டு துப்பாக்கி உட்பட 8 கிலோ சிகப்பு பாஸ்பரஸ் கருப்பு வெடி மருந்து மற்றும் நாட்டுத் துப்பாக்கியை தயார் செய்வதற்கான உதிரி பாகங்கள் இருந்தது தெரிய வந்தது.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் நாட்டுத் துப்பாக்கி மற்றும் வெடி மருந்துகள், உதிரி பாகங்கள் அனைத்தையும் கைப்பற்றி ஜேம்ஸ் பீட்டரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
மேலும் சங்கராபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் சட்டத்துக்கு புறம்பாக நாட்டு துப்பாக்கி வைத்திருக்கும் நபர்கள் மற்றும் தொடர் குற்ற செயலில் ஈடுபடும் நபர்கள் மீது பாரபச்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சங்கராபுரம் காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Hindusthan Samachar / ANANDHAN