ரயில்வே கேட் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை அமைப்பது குறித்து எம் எல் ஏ தங்கப்பாண்டியன் ஆய்வு
ராஜபாளையம், 1 டிசம்பர் (ஹி.ச.) விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மலையடிப்பட்டி ரயில்வே கேட்ட கடந்து தான் தினந்தோறும் மில் தொழிலாளிகள். அரசு அலுவலர்கள். பள்ளி கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள் கடந்து செல்ல வேண்டிய சூழல் உள்ளது. ஆகையால் இந்த ரயில்
Mla


ராஜபாளையம், 1 டிசம்பர் (ஹி.ச.)

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மலையடிப்பட்டி ரயில்வே கேட்ட கடந்து தான் தினந்தோறும் மில் தொழிலாளிகள்.

அரசு அலுவலர்கள். பள்ளி கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள் கடந்து செல்ல வேண்டிய சூழல் உள்ளது.

ஆகையால் இந்த ரயில்வே கேட்ட கடந்து செல்லும் பகுதியில் சுரங்கப்பாதை அல்லது மேம்பாலம் அமைப்பது குறித்து இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் ஆய்வு மேற்கொண்டார்

இப்பணி செய்ய எந்த அளவிற்க்கு சாத்தியக்கூறுகள் உள்ளது என்பது குறித்து ரயில்வே துறை பொறியாளர்களுடன் ஆலோசனை செய்து முதல் திட்ட (Project) அறிக்கை தயார் செய்யும் பணியை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளலாம் என அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்

இந்நிகழ்வில் தெற்கு நகர செயலாளர் ராமமூர்த்தி வடக்கு நகர செயலாளர் மணிகண்டராஜா

கழக நிர்வாகிகள் நாகேஷ்வரன். கண்ணன் மற்றும் கழக நிர்வாகிகள் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Hindusthan Samachar / Durai.J