வாழ்நாள் சாதனையாளர் விருதுபெற்ற ஐயா ரஜினிகாந்திற்கு நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள் - சீமான்
சென்னை, 1 டிசம்பர் (ஹி.ச.) வாழ்நாள் சாதனையாளர் விருதுபெற்ற தமிழ்த்திரை உலகின் உச்ச நட்சத்திரம் ஐயா ரஜினிகாந்த் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
Ggs


சென்னை, 1 டிசம்பர் (ஹி.ச.)

வாழ்நாள் சாதனையாளர் விருதுபெற்ற தமிழ்த்திரை உலகின் உச்ச நட்சத்திரம் ஐயா ரஜினிகாந்த் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் அந்த பதிவில் தெரிவித்துள்ளதாவது,

கோவாவில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டிற்கான பன்னாட்டு திரைப்பட விழாவில்

தமிழ்த்திரையுலகில் அரை நூற்றாண்டிற்கும் மேலாக உச்ச நட்சத்திரமாக திகழும் பெருமதிப்பிற்குரிய ஐயா ரஜினிகாந்த் அவர்களுக்கு, வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்ட செய்தியறிந்து பெரும் மகிழ்ச்சியும், பெருமிதமும் அடைந்தேன்.

மக்களை கவர்ந்திழுக்கும் தனித்துவமிக்க தம் கலை ஆற்றலால் திரைத்துறையில் இது வரை யாரும் சாதித்திடாத வகையில் தொடர் வெற்றி நாயகனாக 50 ஆண்டுகளாக திகழும் ஐயா ரஜினிகாந்த் அவர்களின் கலைப்பணி மிகுந்த போற்றுதற்குரியதாகும்.

திரைக்கலையில் ஐயா ரஜினிகாந்த் அவர்களின்

அயராத உழைப்பும், ஒப்படைப்பும் திரைத்துறை மட்டுமின்றி எத்துறையிலும் சாதிக்கத் துடிக்கும் இளைய தலைமுறை பிள்ளைகள் பின்பற்ற வேண்டிய ஆகச்சிறந்த வாழ்வியல் பாடமாகும்.

'வாழ்நாள் சாதனையாளர்' விருது பெற்றுள்ள

ஐயா ரஜினிகாந்த் அவர்களுக்கு என்னுடைய நெஞ்சம் நெகிழ்ந்த அன்பையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று அவர் அந்த அறிக்கையில் தெரிவித்தார்.

Hindusthan Samachar / P YUVARAJ