Enter your Email Address to subscribe to our newsletters

ஈரோடு, 1 டிசம்பர் (ஹி.ச.)
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் அமைந்துள்ள சிப்காட் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் சுத்திகரிக்கப்படாத கழிவுநீரால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தேமுதிக பொதுசெயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பார்வையிட்டு , பொதுமக்களிடம் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த்,
சிப்காட் பகுதி மக்களின் அடிப்படை ஆதாரமான காற்று , குடிநீர் , நிலம் ஆகியவை மாசடைந்து , மக்களின் அடிப்படை தேவையான குடிநீர் கூட ம்ககளுக்கு கிடைப்பதில்லை என்பதால் பெருந்துறை சிப்காட் தொடர்பாக தமிழக அரசு கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. உடனடியாக அரசு இதில் கவனம் கொண்டு தீர்வு காண வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
2023 ல் சிப்காட்டில் தமிழக அரசு அறிவித்த சுத்திகரிப்பு நிலையத்தை இன்னும் 4 மாதங்களில் ஆவது நிறைவேற்ற வேண்டும் என்றும் யாரை ஏமாற்ற இந்த கண்துடைப்பு என கேள்வி எழுப்பினார்.
சிப்காட் பிரச்சனையில் ஆளும் கட்சி , ஆண்ட கட்சி இரண்டிற்குமே பொறுப்பு உள்ளதாகவும் , அவர்கள் எல்லோரும் சுயநலமாக இருப்பதால் , மக்களுக்காக பொதுநலனோடு சிந்திக்கிறவர்கள் இங்க யாருமில்லை.
தேர்தலுக்கு பணம் கொடுப்பதால் மக்கள் மனநிலை மாறி யார் எது செய்தாலும் ஒட்டு போடுகிறார்கள் என்ற பிரேமலதா விஜயகாந்த், மக்களும் மாறனும் அரசியல்வாதிகளும் மாறனும்.
அதிமுக-திமுக இரண்டு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடப்பதாக குறித்த கேள்விக்கு பதிலளித்த பிரேமலதா விஜநகாந்த்,
இது யார் சொல்கிறார்கள் என்றும் உங்கள் மறை முகத்திற்கு நான் நேரடியாக பதில் சொல்ல முடியாது.
கூட்டணி தொடர்பாக யாரோ ஒருவர் சொன்னதை நம்பினால் நான் பதில் சொல்ல முடியாது.
இன்றைக்கும் அனைத்து கட்சிகளும் எங்களுக்கு தோழமை கட்சி தான் என்றும் அனைத்து கட்சிகளுடன் இப்பவும் நட்புடன் இருப்பதாகவும் தொண்டர்கள்,நிர்வாகிகள், மக்கள் விருப்பம் கூட்டணியை ஜனவரி 9 ல் தேமுதிக முடிவு எடுக்கும் என்றார்.
Hindusthan Samachar / Durai.J