Enter your Email Address to subscribe to our newsletters

புதுச்சேரி, 1 டிசம்பர் (ஹி.ச.)
காரைக்காலில் டிட்வா புயலால் தொடர்ந்து 5 நாட்களுக்கு மேல் மழை பெய்து பொதுமக்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இது குறித்து புதுச்சேரியில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி பேட்டி அளித்தார்.
அப்போது, விவசாயிகள், தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் , குடிசை விடுகளை இழந்தவர்களுக்கு 25 ஆயிரமும், இதேபோல் சிவப்பு நிற குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.10 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்..
போலி மருந்து தயாரிப்பு நிறுவனம் 4 ஆண்டுகளாக புதுச்சேரியில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
மருத்து தர கட்டுப்பாடு நிறுவனத்தின் அனுமதி பெறாமல் இந்த தொழிற்சாலை புதுச்சேரியில் 4 எப்படி செய்பட்டது இதன் பின்னணியில் அரசியல் கட்சியின் ஆதரவு உள்ளது.
ஏற்கனவே மருந்து கொள்முதல் செய்ததில் முறைகேட்டில் சுகாதார துறை முன்னாள் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
துறையின் அமைச்சரான முதலமைச்சருக்கு போலி தொழிற்சாலை இயங்கிய தெரியாதா இதற்கான மூலப்பொருள் எங்கிருந்து வந்தது. அந்த நிறுவனத்தின் உரிமையாளரான ராஜா என்பவர் பாஜகவின் உயர்ந்த பொறுப்பிலும், ஆட்சியில் உள்ள ஒருவரின் கட்டுப்பாட்டில் இருக்கிறார்.
சட்டசபையின் நாயகருக்கு இதில் தொடர்ப்பு உள்ளது. இந்த போலி மருந்து தொழிற்சாலை விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்.
இந்த விவகாரத்தில் சிபிசிஐடி போலீசார் எந்த ஒரு நடவடிக்கையும எடுக்க மாட்டார்கள். ஆகவே இது தொடர்பாக நீதிமன்றம் சென்று சிபிஐ விசாரணை நடத்த கோருவோம்.
மக்களின் உயிரோடு இந்த அரசு விளையாடி வருகிறது. மேலும் இவ்விவகாரத்திற்கு பொறுப்பு ஏற்று முதலமைச்சர் ரங்கசாமி பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தினார்.
Hindusthan Samachar / ANANDHAN