Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 1 டிசம்பர் (ஹி.ச.)
வான்பகுதியில் பயணத்தின்போது கடுமையான சூரிய கதிர்வீச்சு காரணமாக கணிசமான எண்ணிக்கையிலான A-320 குடும்ப விமானங்களின் விமானக் கட்டுப்பாடு தொழில்நுட்பத்தில் முக்கியமான தரவுகள் சிதைந்துவிடக்கூடும் என்று கண்டுபிடிக்கப்பட்டது.
எனவே சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் விமான நிறுவனங்களுக்கு தேவையான மென்பொருள் மேம்படுத்தல்களை உடனடியாக மேற்கொள்ளுமாறு விமான நிறுவங்களுக்கு உத்தரவு பிறப்பித்தது.
இந்தப் பிரச்சினையைத் தீர்க்க, இண்டிகோ, ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகிய மூன்று இந்திய விமான நிறுவனங்களுடன் மொத்தம் 338 A-320 குடும்ப விமானங்களில் மென்பொருள் மேம்படுத்தல் பணிகள் தொடங்கப்பட்டன.
அதன்படி, இண்டிகோ தனது செயல்பாட்டு A-320 குடும்ப விமானங்களில் 200 விமானங்களிலும் மேம்படுத்தல்களை முடித்துள்ளது.
ஏர் இந்தியாவில் 113 விமானங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அவற்றில், செயல்பாட்டில் உள்ள 100 விமானங்களுக்கு மேம்படுத்தல்கள் செய்யப்பட்டுள்ளன.
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸைப் பொறுத்தவரை, 23 A-320 குடும்ப விமானங்களுக்கு மேம்படுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
Hindusthan Samachar / JANAKI RAM