Enter your Email Address to subscribe to our newsletters



கோவை, 1 டிசம்பர் (ஹி.ச.)
கோவையில் 18 வயதுக்கு உட்பட்டோருக்கான மாணவ மாணவியர்கள் பங்குபெற்ற கொங்கு மண்டல அளவிலான கூடைப்பந்து போட்டிகள் கோயம்புத்தூர் மாநகராட்சி கூடைப்பந்து மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டிகளை ஆர்த்தோ-ஒன் விளையாட்டு மருத்துவம் சார்பில் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் 2025-ஐ ஆர்த்தோ-ஒன் எலும்பியல் சிறப்பு மையம் நடத்தியது.
இதில் 14 மற்றும் 18 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் 100-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன.
இன்று நடைபெற்ற சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை ஆர்த்தோ-ஒன் மேலாண்மை குழுவுடன் இணைந்து ஆர்த்தோ-ஒன் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் டேவிட் ஏ.ராஜன் தொடங்கி வைத்தார்.
போட்டிகளில் வெற்றிபெற்ற வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு கோவை காவல் துணை ஆணையர் திவ்யா ஆகியோர் கலந்து கொண்டு விருதுகளை வழங்கி இளம் விளையாட்டு வீரர்களை கௌரவித்தார்.
மேலும் மாணவர்கள் உடற்பயிற்சி, குழுப்பணி மற்றும் விடாமுயற்சியில் உறுதியாக இருக்க ஊக்குவித்தார்.
போட்டிகளில் முதலிடம் மற்றும் இரண்டாம் இடத்தைப் பிடித்தவர்களுக்கு கோப்பைகள் மற்றும் பதக்கங்களை வழங்கியதோடு சிறந்த வீரர் மற்றும் சிறந்த செயல்திறன் கொண்ட அணிக்கான சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டது.
Hindusthan Samachar / V.srini Vasan