Enter your Email Address to subscribe to our newsletters

திருப்பரங்குன்றம், 1 டிசம்பர் (ஹி.ச.)
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என தொடர்ந்து இந்து முன்னணி சார்பாக கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக வரும் 30ஆம் தேதி திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் முன்பாக இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
மேலும் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என மதுரை ஏழுமலை பகுதியைச் சேர்ந்த ராம ரவிக்குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு இதை விசாரித்த நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
இந்த நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் தேதி குறிப்பிடாமல் வழக்கு ஒத்திவைத்து என உயர் நீதிமன்ற மதுரை கிளை அமர்வு உத்தரவிடப்பட்டது.
இந்த நிலையில் நீதிமன்றத்தை மதிப்போம், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபத் தீபம் ஏற்றும் விவகாரத்தில் ஏற்கனவே ஒரு தீர்ப்பு உள்ள நிலையில் மற்றொரு வழக்கு தற்போது நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது.
எனவே ஆர்ப்பாட்டத்திற்கு பதிலாக வரும் 30 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தமிழக முழுவதும் அனைவரும் அந்தந்த பகுதியில் கூட்டு வழிபாடு மற்றும் வேல் வழிபாடு செய்ய வேண்டும் அரசுக்கு நல்ல புத்தி வேண்டும் என்று பிரார்த்தனை மூலம் வெற்றி பெறுவோம் என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதன்படி மதுரை திருப்பரங்குன்றம் வெயில் உகந்த அம்மன் கோவிலில் இந்து முன்னணியினர் கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்று தென் கால் கண்மயில் கரைத்தனர்.
Hindusthan Samachar / Durai.J