சிவகங்கை பேருந்து விபத்தில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக பெற்றுவரும் அனைவரும் பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்ப எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன் - டிடிவி தினகரன்
சென்னை, 1 டிசம்பர் (ஹி.ச.) சிவகங்கை பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என அமமுக பொதுசெயலாளர் டிடிவி தினகரன் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். மேலும் அவர் இதுகுறித்து வெளியிட்டுள்ள பத
Ttv


Tw


சென்னை, 1 டிசம்பர் (ஹி.ச.)

சிவகங்கை பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என அமமுக பொதுசெயலாளர் டிடிவி தினகரன் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் இதுகுறித்து வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே இரண்டு அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 9 பெண்கள் உட்பட 11 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 40க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்துகிறது.

பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள அனைவரும் பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்ப எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ