ஜெர்மனியில் தீவிர வலதுசாரி அரசியல் கட்சி துவக்கியுள்ள இளைஞர் அமைப்புக்கு எதிராக நடந்த போராட்டத்தில் வன்முறை
பெர்லின், 1 டிசம்பர் (ஹி.ச.) ஐரோப்பிய நாடான ஜெர்மனியில் முக்கிய எதிர்க்கட்சியாக ஏ.எப்.டி., செயல்பட்டு வருகிறது. இதன் இளைஞர் பிரிவான ''இளம் மாற்று'' என்ற அமைப்பை, ஜெர்மனி உள்நாட்டு உளவு நிறுவனம் ''தீவிரவாதக்குழு''வாக வகைப்படுத்தியிருந்தது.
ஜெர்மனியில்  தீவிர வலதுசாரி அரசியல் கட்சி துவக்கியுள்ள இளைஞர் அமைப்புக்கு எதிராக நடந்த போராட்டத்தில் வன்முறை


பெர்லின், 1 டிசம்பர் (ஹி.ச.)

ஐரோப்பிய நாடான ஜெர்மனியில் முக்கிய எதிர்க்கட்சியாக ஏ.எப்.டி., செயல்பட்டு வருகிறது.

இதன் இளைஞர் பிரிவான 'இளம் மாற்று' என்ற அமைப்பை, ஜெர்மனி உள்நாட்டு உளவு நிறுவனம் 'தீவிரவாதக்குழு'வாக வகைப்படுத்தியிருந்தது.

இதையடுத்து, அது கலைக்கப்பட்டு, 'ஜெர்மன் தலைமுறை' என்ற புதிய இளைஞர் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அரசியல் கட்சிகள் மற்றும் தொழிலாளர்கள் அமைப்புகள் சார்பில் போராட்டம் நடந்தது. அப்போது நகரின் முக்கிய பகுதிகளில் 30,000க்கும் மேற்பட்டோர் குவிந்தனர்.

இதைத் தடுக்க முயன்ற போலீசாருடன் போராட்டகாரர்கள் மோதலில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் 15 போலீசார் காயமடைந்ததாக கூறப்படுகிறது.

Hindusthan Samachar / JANAKI RAM