சென்னையில் இன்று 14 இண்டிகோ விமானங்கள் ரத்து
சென்னை, 10 டிசம்பர் (ஹி.ச.) தனியார் விமான நிறுவனமான இண்டிகோ, கடந்த 2-ந் தேதியில் இருந்து தனது சேவையில் குளறுபடிகளை சந்தித்து வருகிறது. விமானிகள் பணி நேரம் தொடர்பான மத்திய அரசின் புதிய விதிமுறைகளால் இந்த நிலை ஏற்பட்டது. நாள்தோறும் நூற்றுக்கணக்
சென்னையில் இன்று 14 இண்டிகோ விமானங்கள் ரத்து


சென்னை, 10 டிசம்பர் (ஹி.ச.)

தனியார் விமான நிறுவனமான இண்டிகோ, கடந்த 2-ந் தேதியில் இருந்து தனது சேவையில் குளறுபடிகளை சந்தித்து வருகிறது. விமானிகள் பணி நேரம் தொடர்பான மத்திய அரசின் புதிய விதிமுறைகளால் இந்த நிலை ஏற்பட்டது. நாள்தோறும் நூற்றுக்கணக்கான விமானங்கள் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால், நாடு முழுவதும் விமான நிலையங்களில் பயணிகள் தவித்தனர்.

இதை கட்டுப்படுத்த மத்திய அரசு கட்டண உச்சவரம்பை கொண்டு வந்தது. இண்டிகோ நிறுவன விமானங்களின் செயல்பாடுகளில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டது.

அந்த வகையில் சென்னை விமான நிலையத்தில் இருந்து இன்று (டிச 10) புறப்பட வேண்டிய 14 இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து மலேசியா, பாங்காக், சிங்கப்பூர் செல்ல வேண்டிய இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டது.

டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, ஜெயப்பூர், ஐதராபாத், பாட்னா செல்ல வேண்டிய விமானங்களும் ரத்து செய்யப்பட்டன.

சென்னை உள்பட நாடு முழுவதும் 9வது நாளாக இண்டிகோ விமானங்களின் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

Hindusthan Samachar / vidya.b