Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 10 டிசம்பர் (ஹி.ச.)
அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று (டிச 10) காலை தொடங்கியது. இக்கூட்டத்தில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த
2,500-க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
அதிமுகவின் அவைத் தலைவர் தமிழ் உசேனுக்கு திடீர் உடல்நலக் குறைபாடு ஏற்பட்டதால் அவர் பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. இந்த நிலையில், தற்காலிக அவைத் தலைவராக முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமியை நியமித்த எடப்பாடி பழனிச்சாமி, அவர் தலைமையில் பொதுக்குழு நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.
இதன்படி, கேபி முனுசாமி தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது.
கூட்டத்தில் மறைந்த தலைவர்களுக்கும், கட்சி நிர்வாகிகள் மறைவுக்கும் இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.தீர்மானத்தை முன்னாள் அமைச்சர் செம்மலை வாசித்தார்.
தீர்மானத்தில் முக்கியமாக, மறைந்த முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதியின் மூத்தமகன் மு.க.முத்துவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதேபோல், கரூர் தவெக கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேருக்கும், மறைந்த முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் வாழ்நாள் உதவியாளர் மகாலிங்கம் மறைவுக்கும், மூத்த நடிகை சரோஜாதேவிக்கும், நாகாலாந்து கவர்னராக இருந்து மறைந்த இல.கணேசனுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
பின்னர், கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அனைவரும் எழுந்து நின்று 2 நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தினார்கள்.
இந்த பொதுக்குழு கூட்டத்தில் 16 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.
Hindusthan Samachar / vidya.b