Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 10 டிசம்பர் (ஹி.ச.)
தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் இன்று (டிச 10) நடைபெறவுள்ளது.
சென்னை வானகரம் ஶ்ரீவாரி வெங்கடாசலபதி மண்டபத்தில் அதிமுக அவை தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் காலை 10 மணியளவில் தொடங்குகிறது.
இதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.
இதற்காக பொதுக்குழு உறுப்பினர்கள் 3,000 பேர், செயற்குழு உறுப்பினர்கள் 5,000 பேர் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்கும் நிர்வாகிகளுக்கு சைவ, அசைவ உணவு அளிக்கப்பட உள்ளது. காலை உணவு 3,000 பேருக்கு, மதிய உணவு சைவத்தில் 2,000 பேருக்கும், அசைவத்தில் 8,000 பேருக்கும் உணவு தயார் செய்யப்பட்டுள்ளது.
டிசம்பர் 15 ஆம் தேதிக்குள் பன்னீர்செல்வம் முக்கிய முடிவை எடுக்க போவதாக கூறியுள்ளார். ஏற்கனவே செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது உள்ளிட்ட நகர்வு அதிமுகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் 2026 சட்டமன்ற தேர்தல் வியூகம், கூட்டணி விவகாரம், அதிமுக ஒருங்கிணைப்பு பணி, திமுகவுக்கு எதிராக முன்னெடுக்க வேண்டிய பிரச்சனைகள் உள்ளிட்ட பலவற்றை விவாதித்து தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அதிமுகவின் இன்றைய நிகழ்வு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
Hindusthan Samachar / vidya.b