Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 10 டிசம்பர் (ஹி.ச.)
மகாகவி பாரதியாரின் நினைவுகளைப் போற்றும் வகையில் அவர் மறைந்த நூற்றாண்டின் நினைவாகச் செப்டம்பர் 11 ஆம் நாள் ஆண்டுதோறும் மகாகவி நாள் எனக் கடைப்பிடிக்கப்படும் என 10.9.2021 அன்று அறிவித்து, 14 அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.
அவற்றுள் பாரதி இளம் கவிஞர் விருது, தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்கள், கட்டுரைகளைப் புத்தகமாக வெளியிடுதல், காசியில் அவர் வாழ்ந்த வீடு அரசின் சார்பில் பராமரிக்கப்பட நிதியுதவி வழங்குதல், பாரதியார் படைப்புகளை நாடகங்களாகவும், குறும்படங்களாகவும் வெளியிடுதல் முதலியவை குறிப்பிடத்தக்கவையாகும்.
மகாகவி பாரதியார் பிறந்த நாளான, டிசம்பர் 11ஆம் நாள் ஆண்டுதோறும் அரசு விழாவாகத் தமிழ்நாடு அரசின் சார்பில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டின் மகாகவி பாரதியார் பிறந்த நாளான 11.12.2025(நாளை) அன்று காலை 9.30 மணியளவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசின் சார்பில், சென்னை கடற்கரை, காமராசர் சாலையில் உள்ள பாரதியார் சிலைக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து, மலர்கள் தூவி மரியாதை செலுத்துகிறார்கள்.
இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு மேயர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், துணை மேயர், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b