ஜனவரி 15-ம் தேதிக்குள் மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாரிகளை நியமிக்க மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு உத்தரவு
புதுடெல்லி, 10 டிசம்பர் (ஹி.ச.) மக்கள் தொகை கணக் கெடுப்புப் பணியை மத்திய உள்துறை அமைச்சகம் நடத்த உள்ளது. இப்பணி அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2 கட்டங்களாக தொடங்கும் என்று நாடாளுமன்றத்தில் கடந்த 2-ந் தேதி மத்திய அரசு தெரிவித்தது. 2026-ம் ஆண்ட
ஜனவரி 15-ந்தேதிக்குள் மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாரிகளை நியமிக்க மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு உத்தரவு


புதுடெல்லி, 10 டிசம்பர் (ஹி.ச.)

மக்கள் தொகை கணக் கெடுப்புப் பணியை மத்திய உள்துறை அமைச்சகம் நடத்த உள்ளது.

இப்பணி அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2 கட்டங்களாக தொடங்கும் என்று நாடாளுமன்றத்தில் கடந்த

2-ந் தேதி மத்திய அரசு தெரிவித்தது.

2026-ம் ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை மாநில மற்றும் யூனியன் - பிரதேசங்களின் வசதிக்கு ஏற்ப 30 நாட்களுக்குள் வீடுகள் கணக்கெடுப்பு நடத்தப்படும்.

இரண்டாம் கட்டமாக 2027-ம் ஆண்டு மார்ச் 1-ந் தேதி முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கு அதிகாரிகளை வருகிற ஜனவரி 15-ந் தேதிக்குள் நியமிக்க வேண்டும் என்று அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இந்தியப் பதிவாளர் ஜெனரல் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது:-

மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கான அதிகாரிகள் நியமனத்தை 2026-ம் ஆண்டு ஜனவரி 15-ந்தேதி முடிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. சுமார் 700 முதல் 800 பேர்களுக்கு ஒரு கணக்கெடுப்பாளருக்குப் பணி ஒதுக்கப்பட வேண்டும்.

ஒவ்வொரு 6 கணக்கெடுப்பாளர்களுக்கும் மேற்பார்வையாளர் நியமிக்கப்பட வேண்டும். மக்கள் தொகை கணக்கெடுப்பு விதிகள்-1990-ன் விதி 3-ன் படி, ஆசிரியர்கள், எழுத்தர்கள் அல்லது மாநில அரசு மற்றும் உள்ளூர் அதிகார சபையின் எந்தவொரு அதிகாரியும் கணக்கெடுப்பாளராக நியமிக்கப்படலாம். கணக்கெடுப்பாளரை விட உயர்ந்த பதவியில் உள்ள அதிகாரிகள் மேற்பார்வையாளராக நியமிக்க வேண்டும்.

ஜனவரி 15-ந் தேதிக்குள் மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாரிகளை நியமிப்பதை உறுதி செய்ய மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகங்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / JANAKI RAM