கிசான் சேவா, ஸ்வச் பாரத் திட்டங்களின் பெயரில் பாஜக நன்கொடை வசூல் -காங்கிரஸ் குற்றச்சாட்டு
புதுடெல்லி, 10 டிசம்பர் (ஹி.ச.) மத்திய அரசு திட்டங்களின் பெயரில் பாஜக நன்கொடை வசூலித்ததாக ஆர்டிஐ தகவலை சுட்டிக்காட்டி காங்கிரஸ் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. கிசான் சேவா, ஸ்வச் பாரத், பேட்டி பச்சாவோ பேட்டி பதாவோ உள்ளிட்ட திட்டங்களின் ப
பாஜக


புதுடெல்லி, 10 டிசம்பர் (ஹி.ச.)

மத்திய அரசு திட்டங்களின் பெயரில் பாஜக நன்கொடை வசூலித்ததாக ஆர்டிஐ தகவலை சுட்டிக்காட்டி காங்கிரஸ் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

கிசான் சேவா, ஸ்வச் பாரத், பேட்டி பச்சாவோ பேட்டி பதாவோ உள்ளிட்ட திட்டங்களின் பெயரில் நன்கொடை வசூல் செய்ததாகவும், மத்திய அரசின் திட்டங்களுக்கு மக்கள் கொடுக்கும் நன்கொடை பாஜகவிற்கு சென்றதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021 டிசம்பர் முதல் 2022 பிப்ரவரி வரை சொந்த கட்சிக்கு பாஜக நிதி திரட்டியது ஆர்டிஐ மூலம் தெரியவந்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது.

குறிப்பிட்ட இந்த மோசடி தொடர்பாக பிரதமர் மோடி விளக்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

மேலும் இந்திய அரசின் திட்டங்கள் மூலம் பாஜகவின் கஜானா நிரப்பப்பட்டது ஏன் என்றும் காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

Hindusthan Samachar / Durai.J