Enter your Email Address to subscribe to our newsletters

திருப்பூர், 10 டிசம்பர் (ஹி.ச.)
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த குண்டடம் பகுதியில் பசுபதி (26) என்பவர் வேறுவெடம்பாளையத்தைச் சேர்ந்த சேமலை என்பவரின் மகன். குடிபோதையில் வீட்டுக்கு வந்த தந்தை சேமலை மற்றும் மகன் இடையே உண்டான வாய்த்தகராறு வன்முறையாக மாறி, கோபத்தில் பசுபதி கல்லால் தந்தையின் தலையை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் கடுமையான காயம் அடைந்த சேமலை உணர்விழந்த நிலையில் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த தொடர்பில் குண்டடம் போலீசார் வழக்கு பதிவு செய்து, பசுபதியை கைது செய்தனர். அவர்மீது BNS 296(b), 118(1), 351(3) மற்றும் பழைய IPC பிரிவுகள் 294(b), 324, 506(2) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட பசுபதி, தாராபுரம் மஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு, வரும் 19 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். பின்னர், காவலர்கள் அவரை தாராபுரம் சிறைக்கு அழைத்துச் சென்றனர்.
Hindusthan Samachar / ANANDHAN