ராமேஸ்வரத்தில் மீண்டும் கனமழை - மீனவர்கள் இன்று கடலுக்கு செல்ல தடை
ராமநாதபுரம், 10 டிசம்பர் (ஹி.ச.) ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் பேருந்து நிலையம், ராமர் தீர்த்தம், ரத வீதி, அக்னி தீர்த்தம் உள்ளட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது. ராமேஸ்வரத்தில் பல இடங்களில் ஏற்கனவே பெய்த கனமழை காரணமாக தண்ணீர் தேங்கிய
ராமேஸ்வரத்தில் மீன்டும் கனமழை - மீனவர்கள் இன்று கடலுக்கு செல்ல தடை


ராமநாதபுரம், 10 டிசம்பர் (ஹி.ச.)

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் பேருந்து நிலையம், ராமர் தீர்த்தம், ரத வீதி, அக்னி தீர்த்தம் உள்ளட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

ராமேஸ்வரத்தில் பல இடங்களில் ஏற்கனவே பெய்த கனமழை காரணமாக தண்ணீர் தேங்கியிருக்கும் நிலையில் மீண்டும் மழை பெய்கிறது.

வங்கக்கடலில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று (டிச 10) கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

ராமேஸ்வரம் மீனவர்கள் தங்களுடைய படகுகளை பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி வைக்க மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

அதேபோல் மணிக்கு 45 கி.மீ வேகம் வரை காற்று வீசக் கூடும் என வானிலை மையம் விடுத்துள்ள எச்சரிக்கையை தொடர்ந்து, மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

இதற்கான அறிவிப்பை அம்மாவட்ட மீன்வளத்துறை வெளியிட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b