Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 10 டிசம்பர் (ஹி.ச.)
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சிஇஓவான சத்யநாதெல்லா, இந்தியா வந்துள்ளார். டெல்லியில் அவர் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.
இதனைத் தொடர்ந்து சத்யநாதெல்லா தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
இந்தியாவில் ஏஐ வாய்ப்பு குறித்து ஊக்கமளிக்கும் வகையில் கலந்துரையாடிய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கிறேன். நாட்டின் லட்சியங்களை ஆதரிக்க, ஆசியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிய முதலீடாக 1.57 லட்சம் கோடி ரூபாயை இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு முதல், எதிர்காலத்துக்கு தேவையான உள்கட்டமைப்பு திறன்கள், உருவாக்குவதற்காக முதலீடு செய்ய மைக்ரோசாப்ட் நிறுவனம் உறுதி பூண்டுள்ளது.
என அதில் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி எக்ஸ் தள பதிவில்,
ஏஐ யைப் பொறுத்தவரை, இந்தியா மீது உலக நாடுகள் நம்பிக்கையுடன் உள்ளது.
சத்யா நாதெல்லாவுடன் மிகவும் ஆக்கப்பூர்வமான கலந்துரையாடல் நடந்தது. ஆசியாவிலேயே மைக்ரோசாப்ட் தனது மிகப் பெரிய முதலீட்டைச் செய்யும் இடமாக இந்தியா தேர்தெடுத்திருப்பதை கண்டு மகிழ்ச்சி. இந்திய இளைஞர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, செயற்கை நுண்ணறிவின் சக்தியை பயன்படுத்திக் கொள்வார்கள்.
என அதில் பதிவிட்டுள்ளார்.
ஆந்திராவில் மிகப் பெரிய டேட்டா சென்டர் அமைக்க 1.3 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக கூகுள் நிறுவனம் சமீபத்தில் அறிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / JANAKI RAM