Enter your Email Address to subscribe to our newsletters

குஜராத், 10 டிசம்பர் (ஹி.ச.)
குஜராத்தின் சூரத்தில் உள்ள பிரபல ராஜ் டெக்ஸ்டைல்ஸ் வளாகத்தில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான துணிகள் எரிந்து சாம்பலாகின.
சூரத்தின் பர்வத் பாட்டியாவில் உள்ள ஏழு மாடிகளை கொண்ட ராஜ் ஜவுளி வளாகத்தில் தரை களத்தில் அதிகாலை பெரிய தீ விபத்து ஏற்பட்டது.
தரைத்தளத்தில் ஏற்பட்ட தீ அடுத்தடுத்து மளமளவென பரவி கட்டிடத்தின் கட்டிடத்தில் மேல் தளம் வரை பரவியது.
தீ கொழுந்துவிட்டு எரிய தொடங்கி வானளவு கரும்புகை எழுந்த நிலையில், தீயணைப்பு துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு பல தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்தன.
தீ விபத்து ஏற்பட்ட நேரத்தில் ஜவுளி வளாகத்தில் பெரிய அளவில் யாரும் இல்லாததால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
தரைத்தளத்தில் உள்ள லிப்ட் வயரில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக முதலில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், அந்த வயரிங் மூலமாகவே அடுத்தடுத்து களங்களுக்கு தீவிரவியதாகவும் கூறப்படுகிறது.
Hindusthan Samachar / GOKILA arumugam