Enter your Email Address to subscribe to our newsletters

திருநெல்வேலி, 10 டிசம்பர் (ஹி.ச.)
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 10ஆம் தேதி சர்வதேச மனித உரிமைகள் தினம் அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு இன்று (டிச 10) திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணி தலைமையில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மாநகர காவல் துணை ஆணையர்கள் வினோத் சாந்தாராம் (கிழக்கு), விஜயகுமார் (தலைமையிடம்) மற்றும் காவல் அதிகாரிகள், காவலர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து சர்வதேச மனித உரிமைகள் தின உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
அப்போது அனைவரும்,
இந்திய அரசியலமைப்புச் சட்டத்திலும், இந்தியாவில் செயல்படுத்தத்தக்க பன்னாட்டு சட்டங்களிலும் வரையறுக்கப்பெற்ற மனித உரிமைகள் குறித்து உண்மையுடனும், பற்றுறுதியுடனும் நடந்து கொள்வேன் என்றும் நான் உளமாற உறுதி மொழிகிறேன்.
எந்தவித வேறுபாடுமின்றி, அனைவரின் மனித உரிமைகளை மதித்து நடப்பதுடன், மனித உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில், நான் என்னுடைய கடமைகளை ஆற்றுவேன், என்னுடைய எண்ணம், சொல் அல்லது செயல் மூலம் பிறருடைய மனித உரிமைகளை மீறுகிற எந்த ஒரு செயலையும், நேரடியாகவோ மறைமுகமாகவோ செய்ய மாட்டேன். மனித உரிமைகள் மேம்படுத்துவதற்கு, நான் எப்போதும் ஆயத்தமாக இருப்பேன் என்று உளமார உறுதி கூறுகிறேன் என்று உறுதிமொழி ஏற்றனர்.
Hindusthan Samachar / vidya.b