Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 10 டிசம்பர் (ஹி.ச.)
தமிழகத்தில் இயங்கி வரும் பள்ளி வளாகத்துக்குள் தொழில்துறை பயிற்சி மையங்கள் எனும் ஐ.டி.ஐ. அமைப்பதற்கு ஏதுவான பள்ளிகளை தேர்வு செய்ய சில விவரங்களை கல்வித் துறை, அதிகாரிகளிடம் கேட்டிருக்கிறது.
இதுதொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குனர், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,
ஒவ்வொரு பள்ளியிலும் ஐ.டி.ஐ. அமைக்க குறைந்தபட்சம் நிலத்தேவையாக 50 சென்ட் நிலம் இருக்கவேண்டும். தொழில் பயிற்சி நிலையங்கள் இல்லாத பகுதிகளில் உள்ள பள்ளிகள் தேர்வு செய்யப்பட வேண்டும்.
தொழில் மண்டலங்கள், தொழிற்சாலைகள், தொழில்துறை பகுதிகளுக்கு அருகில் உள்ள பள்ளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.இதன் மூலம் தொழில் தொடர்புகள் மற்றும் மாணவர்களின் வேலைவாய்ப்புகள் உறுதி செய்யப்படும்.
இந்த வசதிகள் கொண்டுள்ள அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளை தேர்ந்தெடுத்து பள்ளிக்கல்வித்துறைக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Hindusthan Samachar / vidya.b