தன்னை இந்த உலகத்திற்கு உயிர் கொடுத்து அறிமுகப்படுத்தியவரையே திருப்திகரமாக வைத்துக் கொள்ள முடியாதவர் அன்புமணி - அமைச்சர் சேகர்பாபு
சென்னை, 10 டிசம்பர் (ஹி.ச.) இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சென்னை கொளத்தூர் பூம்புகார் நகரில் கட்டப்பட்டு வரும் அருள்மிகு கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டட கட்டுமானப் பணிகளையும், இராஜாஜி நகரில் நடைபெற்று வரும் மூத்த குட
Sekar


சென்னை, 10 டிசம்பர் (ஹி.ச.)

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சென்னை கொளத்தூர் பூம்புகார் நகரில் கட்டப்பட்டு வரும் அருள்மிகு கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டட கட்டுமானப் பணிகளையும், இராஜாஜி நகரில் நடைபெற்று வரும் மூத்த குடிமக்கள் உறைவிட கட்டுமான பணிகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க அறிவுரைகளை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து, வடபழனி அருள்மிகு வடபழனி ஆண்டவர் திருக்கோயிலின் உபக் கோயிலான அருள்மிகு அங்காள பரமேஸ்வரி திருக்கோயிலில் ரூபாய் 20.50 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட உள்ள திருப்பணிகளை தொடங்கி வைத்த அவர், வடபழனி திருக்கோயிலின் மற்றொரு உபக் கோயிலான அருள்மிகு ஆதி மூலப்பெருமாள் திருக்கோயில் ரூ.3.37 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் கருங்கல் கட்டுமான பணிகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதன் பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,

மயிலாப்பூர், அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயில் சார்பில் கொளத்தூரில் தற்காலிக கட்டிடத்தில் நடத்தப்பட்டு வரும் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சுமார் ஆயிரம் மாணவ மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர். இக்கல்லூரிக்கு நிரந்தரம் கட்டிடம் கட்டுவதற்கு பூம்புகார் நகரில் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. வரும் ஜனவரி மாதத்தில் புதிய கல்லூரி கட்டடம் மாணவர்களின் பயன்பாட்டிற்கு ஒப்படைக்கப்படும். அதேபோல், கொளத்தூர் ராஜாஜி நகரில் எவ்வித கட்டணமும் இன்றி 100 மூத்த குடிமக்கள் பயன்பெறும் வகையில் ரூ.8.88 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மூத்த குடிமக்கள் உறைவிடமும் வரும் ஜனவரி மாதத்திற்குள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

சன்மார்க்க அடையாளமாக நெறியை போதித்தவரும். ஒழுக்கத்தின் திகழ்கின்ற. அவருடைய உள்ளத்திற்கு ஏற்றார் போல் வெள்ளுடையில் காட்சி தருகின்ற அருட்பெருஞ்ஜோதி வள்ளலாருக்கு சிறப்பு சேர்க்கும் வலகயில் வருகின்ற 2026 பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் கீழ்பாக்கம் அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயிலுக்கு சொந்தமான மைதானத்தில் 10.000 சன்மார்க்க

அன்பர்கள் பங்கேற்கும் வகையில் அனைத்துலக வள்ளலார் மாநாட்டினை முதலமைச்சர் தொடங்கி வைக்க உள்ளார்கள்.

இம்மாநாட்டில் கண்காட்சி அரங்குகள், கருத்தரங்கம், ஆய்வரங்கம், மூலிகை கண்காட்சி, நாள் முழுவதும் அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்பட உள்ளன. நிறைவாக, இம்மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் வள்ளலார் குறித்த பல்வேறு புதிய அறிவிப்புகளையும் வெளியிடுவார். நேற்றைய தினம் அதற்கான ஆரம்ப கட்ட பணிகளை தொடங்கியுள்ளோம்.

தமிழ்நாட்டில் கல்வி, வேலைவாய்ப்பு. மருத்துவம் உள்ளிட்ட துறைகள் சரியில்லை அதற்கு காரணம் திமுக ஆட்சி தான் என த.வெ.க கட்சித் தலைவர் நடிகர் விஜய் தெரிவித்துள்ளாரே என செய்தியாளர்கள் கேட்டதற்கு, அதை சொல்பவர் சரியில்லை என்று நான் கூறுகிறேன்.

தைலாபுரத்தை முழுவதுமாக திமுக டேக் ஓவர் செய்து விட்டதாக அன்புமணி தெரிவித்துள்ளாரே என செய்தியாளர்கள் கேட்டதற்கு,

தன்னை இந்த உலகத்திற்கு உயிர் கொடுத்து அறிமுகப்படுத்தியவரையே திருப்திகரமாக வைத்துக் கொள்ள முடியாதவர்களுக்கெல்லாம் பதில் சொல்வதற்கு அவர்கள் தகுதி உடையவர்கள் அல்ல என்பது எனது கருத்தாகும்.

அவருடைய தந்தையாரே அவருக்கு கைக்கூலி என்ற பட்டத்தை வழங்கி உள்ளார். ஆகவே வேறு யாருக்கும் அந்த பட்டத்தை வழங்க கூடிய தகுதி அன்புமணிக்கு இல்லை என்று தெரிவித்தார்.

Hindusthan Samachar / P YUVARAJ