மருத்துவ செலவை குறைத்து வழங்கிய இன்சூரன்ஸ் நிறுவனம் – ரூ.2.82 லட்சம் வட்டியுடன் வழங்க உத்தரவு
திருநெல்வேலி, 10 டிசம்பர் (ஹி.ச.) திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை தாலுகா, கிருஷ்ணாபுரம் பற்பகுளம், டிவன் சிட்டி, கதவு எண் 38-ல் வசிக்கும் பிரான்சிஸ் அவர்களின் மகன் செல்வராஜ் (72) என்பவர், திருநெல்வேலி வண்ணாரப்பேட்டை இஎஸ்ஐ மருத்துவமனையில் மருத்
Nellai Consumer Commision


திருநெல்வேலி, 10 டிசம்பர் (ஹி.ச.)

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை தாலுகா, கிருஷ்ணாபுரம் பற்பகுளம், டிவன் சிட்டி, கதவு எண் 38-ல் வசிக்கும் பிரான்சிஸ் அவர்களின் மகன் செல்வராஜ் (72) என்பவர், திருநெல்வேலி வண்ணாரப்பேட்டை இஎஸ்ஐ மருத்துவமனையில் மருத்துவ உதவியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

ஓய்வு பெற்ற பின்னரும் மருத்துவ காப்பீடு திட்டத்தில் மாதாந்திரமாக தொகை செலுத்தி வந்த அவர், திடீரென ஏற்பட்ட இருதய நோயால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டார். இதற்கான மருத்துவ செலவு ரூ.4,84,845 ஏற்பட்டது.

இதனை யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தில் கோரிக்கை வைத்தபோது, நிறுவனம்ரூ.2,02,272- மட்டுமே வழங்கி, மீதத் தொகையை வழங்க மறுத்துள்ளது. இதனால் மன உளைச்சலுக்குள்ளான செல்வராஜ், திருநெல்வேலி நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையத்தில் ரூ.2,82,573 மீதத் தொகையை பெற மனு தாக்கல் செய்தார்.

நிர்வாக காரணத்தால் வழக்கு கூடுதல் திருநெல்வேலி நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையத்திற்கு மாற்றப்பட்டது.

அங்கு வழக்கை விசாரித்த ஆணைய தலைவர் பிறவிப் பெருமாள் மற்றும் உறுப்பினர் சண்முகப்பிரியா ஆகியோர், இன்சூரன்ஸ் நிறுவனம் குறைவான தொகை வழங்கியதாகக் கண்டறிந்து, ரூ.2,82,573-க்கும் அதற்கு நாளது தேதி வரை வட்டியும் சேர்த்து வழங்கவும், வழக்குச் செலவு ரூ.10,000- வழங்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Hindusthan Samachar / ANANDHAN