நீலகிரி வனப்பகுதியை ட்ரோன் மூலம் வீடியோ பதிவு செய்தவருக்கு ரூ.10,000 அபராதம்!
நீலகிரி, 10 டிசம்பர் (ஹி.ச.) நீலகிரி மாவட்டம் 65% வனப்பகுதியை கொண்டுள்ளது. இந்த வனப்பகுதியில் யானை புலி சிறுத்தை கரடி மான்கள் என ஏராளமான வனவிலங்குகள் காணப்படுகின்றன. இந்நிலையில் நீலகிரியில் வனப்பகுதியை ட்ரோன் மூலம் வீடியோ பதிவு செய்ய வனத்துறையால்
Nilgiris Forest Office


நீலகிரி, 10 டிசம்பர் (ஹி.ச.)

நீலகிரி மாவட்டம் 65% வனப்பகுதியை கொண்டுள்ளது. இந்த வனப்பகுதியில் யானை புலி சிறுத்தை கரடி மான்கள் என ஏராளமான வனவிலங்குகள் காணப்படுகின்றன. இந்நிலையில் நீலகிரியில் வனப்பகுதியை ட்ரோன் மூலம் வீடியோ பதிவு செய்ய வனத்துறையால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் உதகை அருகே குந்தா வனச்சரகத்திற்கு உட்பட்ட மஞ்சூர் to கிண்ணக்கொரை சாலையில் தாய் சோலை காப்பு காட்டு பகுதியில் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த முகமது அனுஷ் என்பவர் ட்ரோன் மூலம் வனப்பகுதியை வீடியோ பதிவு செய்து கொண்டு இருந்தார்.

அப்போது அங்கு வர்த்த வனத்துறையினர் அனுஷை கையும் களவுமாக பிடித்து அவருக்கு ரூபாய் 10000/-(பத்தாயிரம் மட்டும்) அபராதம் விதித்தனர். மேலும் அவருக்கு வனப்பகுதியில் இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என அறிவுரை கூறிய அனுப்பி வைத்தனர்.

மேலும் நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் வனப்பகுதி இருக்கும் இடங்களில் ட்ரோன் மூலம் வீடியோ பதிவு செய்ய வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மீறி ட்ரோன் மூலம் வீடியோ பதிவு செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தி உள்ளனர்.

Hindusthan Samachar / ANANDHAN