பனையூரில் நாளை ஆலோசனை நடத்த விஜய் திட்டம்!
சென்னை, 10 டிசம்பர் (ஹி.ச.) கட்சி நிர்வாகிகளுடன் தவெக தலைவர் விஜய், நாளை அவசர ஆலோசனையில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தவெகவின் மாநில நிர்வாகிகளும் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பனையூரில் நாளை நடைபெறும் இந்த கூட்
விஜய்


சென்னை, 10 டிசம்பர் (ஹி.ச.)

கட்சி நிர்வாகிகளுடன் தவெக தலைவர் விஜய், நாளை அவசர ஆலோசனையில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தவெகவின் மாநில நிர்வாகிகளும் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பனையூரில் நாளை நடைபெறும் இந்த கூட்டத்தில் தேர்தல் பணிகள், சிறப்பு தீவிர திருத்தம், அடுத்த கட்ட மக்கள் சந்திப்பு பயண ஏற்பாடுகள் குறித்து முக்கிய முடிவு எடுக்க வாய்புள்ளதாக கூறப்படுகிறது.

கட்சி தலைமையில் இருந்து அளிக்கப்பட்ட பணிகளை சரியாக செய்து முடிக்கவில்லை என்பதாலும், பூத் கமிட்டி, நிர்வாகிகள் நியமனம் உள்ளிட்ட பணிகள் முழுமை அடையாததாலும் சில மாவட்ட செயலாளர்கள் மீது விஜய் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சில மாவட்ட செயலாளர்கள் திமுக, அதிமுகவுடன் தொடர்பில் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதாக கூறப்படும் நிலையில் முறையாக செயல்படாத மாவட்ட செயலாளர்கள் பட்டியல் தயாராக உள்ளதாக கூறப்படுகிறது.

தேர்தல் நெருங்கி வருவதால் மாவட்ட செயலாளர்களை ஒழுங்குப்படுத்த முடிவு செய்ததாகவும், கட்சி தலைமையின் உத்தரவுக்கு எதிராக செயல்படுபவர்களை விஜய் நேரில் கண்டிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Hindusthan Samachar / Durai.J