Enter your Email Address to subscribe to our newsletters

திருநெல்வேலி, 10 டிசம்பர் (ஹி.ச.)
பராமரிப்பு பணிகள் காரணமாக திருநெல்வேலியில் நாளை (டிச 11) மின்தடை ஏற்படவுள்ளது.
திருநெல்வேலி நகர்ப்புற கோட்ட செயற்பொறியாளர் முருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
மேலப்பாளையம், ரெட்டியார்பட்டி மற்றும் புதிய பேருந்து நிலையம் துணைமின் நிலையங்களில் நாளை (11.12.2025, வியாழக்கிழமை) மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பாதுகாப்பு கருதி மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி மேலப்பாளையம், கொட்டிகுளம் பஜார், அம்பை மெயின் ரோடு, சந்தை பகுதிகள், குலவணிகர்புரம், மத்திய சிறைச்சாலை, மாசிலாமணிநகர், வீரமாணிக்கபுரம்,நேதாஜி சாலை, ஹமீபுரம், மேலக்கருங்குளம், முன்னீர்பள்ளம், ஆரைக்குளம், அன்னைநகர், தருவை, ஓமநல்லூர், கண்டித்தான்குளம், ஈஸ்வரியாபுரம், ஆஸ்பத்திரி ரோடு, தெற்கு பைபாஸ் ரோடு, மேலகுலவணிகபுரம், பஜார் திடல், ஜின்னா திடல், டவுன் ரோடு, அண்ணா வீதி, பஷீர் அப்பா தெரு,
கணேசபுரம், செல்வகாதர் தெரு, உமறுப்புலவர் தெரு, ஆசாத் ரோடு, PSN கல்லூரி.
ரெட்டியார்பட்டி, டக்கரம்மாள்புரம், கொங்கன்தான்பாறை, பொன்னாக்குடி, அடைமிதிப்பான்குளம், செங்குளம், புதுக்குளம், இட்டேரி மற்றும் தாமரைச்செல்வி, பெருமாள்புரம், பொதிகைநகர், அரசு ஊழியர் குடியிருப்பு, என்.ஜி.ஓ. காலனி, மகிழ்ச்சிநகர், திருநகர், திருமால்நகர், ராமச்சந்திராகார்டன், ராமச்சந்திராநகர், பரணிபார்க், அரசு பொறியியல் கல்லூரி பகுதி மற்றும் புதிய பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / vidya.b