நடிகர் கார்த்தி நடிப்பில் உருவான “வா வாத்தியார்” திரைப்படத்தை வெளியிட கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை, 10 டிசம்பர் (ஹி.ச.) நடிகர் கார்த்தி நடிப்பில் உருவான “வா வாத்தியார்” திரைப்படத்தை வெளியிட கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கடனாக பெற்ற 21.78 கோடி ரூபாயை செலுத்தும் வரை வா வாத்தியார் திரைப்படத்த
Karthi


Gnanav


சென்னை, 10 டிசம்பர் (ஹி.ச.)

நடிகர் கார்த்தி நடிப்பில் உருவான “வா வாத்தியார்” திரைப்படத்தை வெளியிட கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கடனாக பெற்ற 21.78 கோடி ரூபாயை செலுத்தும் வரை வா வாத்தியார் திரைப்படத்தை வெளியிட தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வா வாத்தியார் படத்தை அனைத்து ஓடிடி உள்ளிட்ட அனைத்து தளங்களிலும் வெளியிட அனுமதியில்லை என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திவால் ஆன தொழிலதிபர் அர்ஜுன் லால் சுந்தர் தாஸ் என்பவரிம் வாங்கிய கடன் தொகை வட்டியுடன் சேர்த்து 21.78 கோடி ரூபாயை திரும்ப செலுத்தாமல் இருப்பதால் ஞானவேல் ராஜா தயாரித்துள்ள வா வாத்தியார் படத்தை வெளியிட தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்ற சொத்தாட்சியர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில் தற்போது நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ