2026 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ஐந்து வகையான பொருட்கள் புதுச்சேரி அரசு புது அறிவிப்பு
புதுச்சேரி, 10 டிசம்பர் (ஹி.ச.) புதுச்சேரியில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. 2026-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் பகுதிகளில் உள்ள அனைத்து குட
புதுச்சேரி அரசு


புதுச்சேரி, 10 டிசம்பர் (ஹி.ச.)

புதுச்சேரியில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

2026-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி, காரைக்கால், மாஹே

மற்றும் ஏனாம் பகுதிகளில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

4 கிலோ பச்சரிசி, 1 கிலோ நாட்டு சர்க்கரை, 1 கிலோ பாசிப்பருப்பு, 300 கிராம் நெய் மற்றும் 1 லிட்டர் சூரிய காந்தி எண்ணெய் ஆகிய 5 பொருட்கள் அடங்கிய பரிசுத் தொகுப்பு ஜனவரி 3-ம் தேதி ரேஷன் கடைகளில் விநியோகம் செய்யப்படும் என தெரிவித்துள்ளது.

மேலும் இந்த பொங்கல் தொகுப்பானது அரசு ஊழியர்கள் மற்றும் கௌரவ குடும்ப அட்டை வைத்திருப்பவர்களுக்கு வழங்கப்பட மாட்டாது என தெரிவித்துள்ள அரசு தகுதி வாய்ந்த அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / Durai.J