ரயில் டிக்கெட் விலை குறைப்பிற்கு கடந்த ஆண்டு ரூ.60,000 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது - ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
புதுடெல்லி, 10 டிசம்பர் (ஹி.ச) நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இன்றைய (டிச 10)லோக்சபா கேள்வி நேரத்தின் போது காங்கிரஸ் எம்பி எம்.கே. விஷ்ணு பிரசாத் பேசினார். அப்போது, கொரோனா காலத்திற்கு முன்பு இருந்ததை போலவே, மூத்த குடிமக்களுக்கும் ரயி
ரயில் டிக்கெட் விலை குறைப்பிற்கு கடந்த ஆண்டு ரூ.60,000 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது - ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்


புதுடெல்லி, 10 டிசம்பர் (ஹி.ச)

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இன்றைய

(டிச 10)லோக்சபா கேள்வி நேரத்தின் போது காங்கிரஸ் எம்பி எம்.கே. விஷ்ணு பிரசாத் பேசினார்.

அப்போது, கொரோனா காலத்திற்கு முன்பு இருந்ததை போலவே, மூத்த குடிமக்களுக்கும் ரயில் டிக்கெட் தள்ளுபடியை மீண்டும் வழங்க அரசு திட்டமிட்டு உள்ளதா என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதில் கூறுகையில்,

நாட்டில் டிக்கெட் விலைகளை குறைவாக வைத்திருக்க ரயில்வே கடந்த ஆண்டு ரூ.60,000 கோடி மானியத்தை வழங்கி இருக்கிறது. இந்தியாவில் டிக்கெட் விலை என்பது அண்டை மற்றும் வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது, அங்குள்ள விலையில் 5 முதல் 10 சதவீதம் தான் உள்ளது.

அண்டை நாடுகளுடன் பார்க்கும்போது இங்கு மிகவும் மலிவு விலையில் டிக்கெட் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

இவ்வாறு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.

Hindusthan Samachar / vidya.b