Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 10 டிசம்பர் (ஹி.ச.)
சோழவந்தான் ரயில்வே மேம்பால பகுதியில் ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் சாலையின் நடுவே முழங்கால் அளவு பள்ளம் ஏற்பட்டுள்ளதால் இந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்கி காயம் ஏற்பட்டு மருத்துவமனை செல்வது தொடர்கதையாக நடைபெற்று வருகிறது.
சில மாதங்களுக்கு முன்பு மேம்பாலத்தில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை அதிகாரிகள் தற்காலிகமாக சரி செய்து சென்றனர் ஆனால் அதன் அருகிலேயே தற்போது ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் முழங்கால் அளவு பள்ளம் ஏற்பட்டுள்ளது.
இதனால் மேம்பாலத்தில் வாகனத்தில் செல்பவர்கள் விபத்தில் சிக்கும் சம்பவம் தொடர்கதையாக நடைபெற்று வருகிறது மாலை மற்றும் இரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் பள்ளம் இருப்பது தெரியாமல் விழுந்து காயம் ஏற்பட்டு மருத்துவமனைக்கு செல்வது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
நெடுஞ்சாலை துறையினர் பள்ளத்தை நிரந்தரமாக சரி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மழைக்காலங்களில் பள்ளத்தில் தேங்கும் மழை நீரால் பெரிய அசம்பாவிதம் நடக்கும் முன்பு பள்ளத்தை சரி செய்ய வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
நேற்று இரவு பள்ளத்தில் விழுந்து இரண்டு நபர்கள் காயம்பட்டதாக அந்த பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர்.
Hindusthan Samachar / Durai.J