ஜன 28 ஆம் தேதி ராஜகோபால சுவாமி கோவில் கும்பாபிஷேகம் - முன்னேற்பாடுகள் தீவிரம்
திருவாரூர், 10 டிசம்பர் (ஹி.ச.) திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடியில் பிரசித்தி பெற்ற வைணவத் தலமான ராஜகோபால சுவாமி கோவில் 23 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. தென்னகத்து தெட்சின துவாரகை என்று பக்தர்களால் போற்றப்படும் இக்கோவிலில் 15 வருடங்கள
ஜன 28 ஆம் தேதி ராஜகோபால சுவாமி கோவில் கும்பாபிஷேகம் - முன்னேற்பாடுகள் தீவிரம்


திருவாரூர், 10 டிசம்பர் (ஹி.ச.)

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடியில் பிரசித்தி பெற்ற வைணவத் தலமான ராஜகோபால சுவாமி கோவில் 23 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. தென்னகத்து தெட்சின துவாரகை என்று பக்தர்களால் போற்றப்படும் இக்கோவிலில் 15 வருடங்களுக்கு பிறகு வரும் ஜனவரி 28ம் தேதி வெகு விமரிசையாக கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

கோயிலில் உள்ள 4 ராஜகோபுரங்களை புதுப்பிக்க ரூ 2.87 கோடி நிதி ஒதுக்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து பாலாலயம் நடத்தப்பட்டு பக்தர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் பங்களிப்புடன் சுமார் ரூ. 15 கோடியில் கும்பாபிஷேக பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

அதில் ஒருபகுதியாக அண்மையில் பந்தக்கால் நடப்பட்டு, கோயில் வளாகத்தில் சுமார் 3500 சதுரடி பரப்பளவில் பிரமாண்டமாக யாகசாலை அமைக்கப்பட்டு வருகிறது.

இப்பணிகளை, கோயில் அறங்காவலர் குழு தலைவர் கருடர் இளவரசன், செயல் அலுவலர் மாதவன் பார்வையிட்டு பணிகளை விரைவு படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

Hindusthan Samachar / vidya.b