Enter your Email Address to subscribe to our newsletters

ராமநாதபுரம், 10 டிசம்பர் (ஹி.ச.)
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 700க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுபடகுகளில் மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் வங்க கடலில் காற்றின் வேகம் அதிகரித்து மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகம் வரை பலத்த காற்று வீசப்படும் எனவும் வழக்கத்தை விட கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதினால் இன்று மீனவர்களுக்கு மீன் பிடிப்பதற்கான அனுமதி சீட்டு ரத்து செய்து மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதனை அடுத்து ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில்
700 க்கு மேற்பட்ட விசைப்படகும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டு படகுகள் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.
இதனால் நாள் ஒன்றுக்கு பத்து கோடி ரூபாய்க்கு மேல் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வருவது மட்டுமல்லாது நேரடியாகவும் மறைமுகமாகவும் 5000-க்கும் மேற்பட்ட மீன்பிடித் தொழிலைச் சார்ந்த தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகின்றது.
Hindusthan Samachar / ANANDHAN