Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 10 டிசம்பர் (ஹி.ச.)
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் அரசிக்கு வரி விதிக்க திட்டமிட்டுள்ளதாக நேற்று பேசியுள்ளார்.
இதையடுத்து அரிசி ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களின் பங்கு விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளன. நேற்று அரிசி ஏற்றுமதியாளர்களின் பங்குகள் வர்த்தகத்தில் சரிந்தன. இதனால் முதலீட்டாளர்கள் பலரும் பெரும் வேதனை அடைந்தனர்.
தாவத் போன்ற பிராண்டுகளுக்கு பெயர் பெற்ற LT Foods நிறுவனத்தின் பங்கு விலை கிட்டத்தட்ட 8 சதவீதம் சரிந்து ஒரு பங்கிற்கு ரூ.362.2 ஆக வர்த்தகம் செய்யப்பட்டது. வட அமெரிக்காவில் அதன் ராயல் பிராண்ட் தான் சிறந்த பாஸ்மதி அரிசி குழு நிறுவனங்களில் ஒன்றாகும்.
GRM Overseas பங்குகள் சுமார் 6 சதவீதம் சரிந்தன.
அதே நேரத்தில் KRBL , காவேரி விதை நிறுவனம் மற்றும் AWL Agri Business பங்குகள் தலா 2.5 சதவீதம் சரிந்தன.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது நிர்வாகம் விவசாய இறக்குமதிகள் மீது புதிய வரிகளை விதிக்கக்கூடும் கூறியுள்ளர்.
இந்திய அரிசி மற்றும் கனேடிய உரங்கள் உட்பட. மலிவான வெளிநாட்டுப் பொருட்கள் உள்நாட்டு உற்பத்தியாளர்களைப் பாதிப்பதாக அமெரிக்க விவசாயிகள் புகார் அளித்த நிலையில் இந்த பதிலை வழங்கியுள்ளார்.
வெள்ளை மாளிகையில் அமெரிக்க விவசாயிகளுக்கு 12 பில்லியன் டாலர் புதிய உதவியை அறிவிக்கும் போது, இறக்குமதி செய்யப்பட்ட பண்ணை பொருட்கள் உள்ளூர் உற்பத்தியாளர்கள் மீது அழுத்தம் கொடுப்பதாகவும், நியாயமற்ற வர்த்தக நடைமுறைகள் என்று விவரித்தவற்றுக்கு எதிராக செயல்படுவதற்கான தனது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார் என்றும் டிரம்ப் கூறினார்.
டிரம்ப் நிர்வாகம் இந்திய இறக்குமதிகள் மீதான வரிகளை 50 சதவீதமாக அதிகரித்த பிறகு, ஏற்றுமதி சார்ந்த பங்குகள் முன்னதாகவே கணிசமாகக் குறைந்துவிட்டன.
இந்தியா ரஷ்ய எண்ணெயை தொடர்ந்து வாங்குவதைக் காரணம் காட்டி அதிக வரி விதிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / JANAKI RAM