Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 10 டிசம்பர் (ஹி.ச.)
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கரட்டுப்பட்டியில் தமிழ்நாடு அரசின் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் தமிழ்நாடு கயிறு வணிக மேம்பாட்டு நிறுவனம் (டான் காயார்) மற்றும் வைகை காயர் குழுமம் இணைந்து தென்னை நார் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது.
இரண்டு நாள் பயிற்சி முகாமில் காயர் நீடில் பெல்ட், ரப்பரைஸ்டு காயர், பல்வேறு தோட்டக்கலை பொருட்கள், தென்னை நார் மரபலகை உள்ளிட்ட பொருட்களின் தயாரிப்பு பயிற்சி வழங்கப்பட்டது.
தென்னை நார் தொழிலில் மேலும் மதிப்பு கூட்டல் உற்பத்தி, தொழில் வாய்ப்புகள், உள்ளூர் மற்றும் ஏற்றுமதி சந்தை வாய்ப்புகள், தமிழக அரசின் மானிய உதவிகள் தொடர்பான ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.
இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 20 தென்னை நார் தொழில் நிறுவனங்கள் கலந்து கொண்டு பயன் பெற்றன.
தமிழ்நாடு கயிறு வணிக நிறுவனம் சார்பாக அசோசியேட் பிரவீன், வைகை காயர் குழுமத்தின் அருளானந்த்,சரவணன்,
டென்னிசன், மற்றும் ரமேஷ் ஆகியோர் முகாமை ஒருங்கிணைப்பு செய்தனர்.
தமிழ் நாடு கயிறு வணிக மேம்பாட்டு நிறுவனத்தால் தொடர்ந்து ராம்ப் திட்டத்தின் கீழ் பல்வேறு பயிற்சி பட்டறைகள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த பயிற்சிகள் வாயிலாக தென்னை நார் தொழில் நிறுவனங்கள் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் உற்பத்தி, உள்ளூர் மற்றும் வெளியூர் சந்தை வாய்ப்புகள், ஏற்றுமதி வாய்ப்புகள், புதிய தொழில் நுட்பங்கள் போன்ற அறிவு சார் வளர்ச்சி வாய்ப்புகளை பெற்று வருகின்றனர்.
முகாமின் நிறைவு நாளில் அனைவரும் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்
Hindusthan Samachar / Durai.J