Enter your Email Address to subscribe to our newsletters

திருப்பரங்குன்றம், 10 டிசம்பர் (ஹி.ச.)
தமிழக தொல்லியல் துறை இணை இயக்குனர் யத்திஷ் குமார் தலைமையில் ஏழு தொல்லியல் துறை அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் திருப்பரங்குன்றம் மலை மீது இன்று காலை ஆய்வு மேற்கொள்ள வந்தனர்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்ற வேண்டுமென இந்து முன்னணி இந்து அமைப்பினர் தொடர்ந்து கோரிக்கைகள் வைத்து வரும் நிலையில், இது தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றம் மதுரை அமர்வில் தீபம் ஏற்ற அனுமதி வழங்கிய நிலையில் அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சமீப காலமாக மேலே உள்ள தூண் தீபதூணா அல்லது நில அளவை கல்லா என விமர்சனங்கள் எழுந்து வந்தது.
இந்த நிலையில் மாநில தொல்லியல் துறை அதிகாரி யத்திஷ் குமார் தலைமையில் ஏழு அதிகாரிகள் காலை 8:45 மணிக்கு ஆய்வுக்காக சென்ற நிலையில் 3 மணி நேரமாக மலை உச்சியில் உள்ள தூணில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் ஆய்வுகளில் சேகரிக்கப்பட்ட தகவல்களை மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமாரிடம் தெரிவிப்பதற்காக புறப்பட்டு சென்றனர்.
Hindusthan Samachar / Durai.J