புதுச்சேரியில் ஓடும் பேருந்தில் மூதாட்டியிடம் செயின் பறித்த பெண் கைது...
புதுச்சேரி, 10 டிசம்பர் (ஹி.ச.) புதுச்சேரிஅருகே ஓடும் சோரப்பட்டு பகுதியை சேர்ந்த சம்பந்தம் - மலர் கொடி தம்பதியர் தனியார் பேருந்தில் புதுவை வந்து இறங்கிய போது 6 பவுன் தங்கச் சங்கிலி காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து அவர்கள்
பெண் கைது


புதுச்சேரி, 10 டிசம்பர் (ஹி.ச.)

புதுச்சேரிஅருகே ஓடும் சோரப்பட்டு பகுதியை சேர்ந்த சம்பந்தம் - மலர் கொடி தம்பதியர் தனியார் பேருந்தில் புதுவை வந்து இறங்கிய போது 6 பவுன் தங்கச் சங்கிலி காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து அவர்கள் கோரிமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதன் அடிப்படையில் காவல்துறையினர் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளில் ஆய்வு செய்தனர். அப்பொழுது பேருந்தில் இருந்து சந்தேகத்திற்கு இடமான முறையில் பெண் ஒருவர் இறங்கி சென்றது கண்டுபிடித்தனர்.

அவர் படத்தை பழைய குற்றவாளிகளின் புகைப்படத்துடன் ஒப்பிட்டு பார்த்தனர்.

விசாரணை மேற்கொண்டபோது, அந்த பெண் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த சின்னத்தாயி என்பது தெரிய வந்தது.

இதனை அடுத்து கோவில்பட்டிக்கு சென்ற போலீசார் சின்ன தாயை பிடித்து புதுச்சேரிக்கு அழைத்து வந்து விசாரித்தனர்.

அப்பொழுது அவர் பேருந்தில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி மலர் கொடியிடம் தங்க சங்கிலியை பறித்ததை ஒப்புக்கொண்டார்.

மேலும் அவர் தங்க சங்கிலியை உருகி கட்டிகளாக மாற்றி வைத்திருந்ததும் பல்வேறு இடங்களில் கைவரிசை காட்டி இருப்பதும் தெரிய வந்தது.

Hindusthan Samachar / Durai.J