மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதித்து வனத்துறை உத்தரவு
திருநெல்வேலி, 10 டிசம்பர் (ஹி.ச.) திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வனத்துறைக்குட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலை தொடரின் அடிவாரத்தில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற மணிமுத்தாறு அருவி. இந்த அருவியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் விழுவதால் வார தினங்களி
மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை - வனத்துறை உத்தரவு


திருநெல்வேலி, 10 டிசம்பர் (ஹி.ச.)

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வனத்துறைக்குட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலை தொடரின் அடிவாரத்தில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற மணிமுத்தாறு அருவி. இந்த அருவியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் விழுவதால் வார தினங்களிலும் வார இறுதி நாட்களிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கோவை, ஈரோடு, நெல்லை, தென்காசி, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலை, நீர்பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக மணிமுத்தாறு அருவிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது.

அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

நீரவரத்து சீரானதும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவர் என வனத்துறை கூறியுள்ளது.

Hindusthan Samachar / vidya.b