Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 11 டிசம்பர் (ஹி.ச.)
தனியார் துறையை சேர்ந்த சிறிய வங்கி பிரிவில் உள்ள AU Small Finance Bank வங்கியில் அந்நிய முதலீட்டு வரம்பை உயர்த்த திட்டமிட்டுள்ளது.
இதற்கான அனுமதி மத்திய அரசு அளித்துள்ள நிலையில் இந்த பங்கின் விலை கடந்த 52 வாரங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் பெரும் உற்சாகம் அடைந்துள்ளனர்.
நிதிச் சேவைகள் துறையிடமிருந்து வங்கிகள் அதன் செலுத்தப்பட்ட மூலதனத்தில் 74 சதவீதம் வரை அந்நிய முதலீட்டு வரம்பை உயர்த்த அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதையடுத்து டிசம்பர் 10ம் தேதியான நேற்று AU Small Finance Bank-யின் பங்கு விலை 52 வாரங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்தன.
தனியார் துறை வங்கிகளுக்கு அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச அளவிற்கு தற்போதுள்ள 49 சதவீதத்திலிருந்து உச்சவரம்பை உயர்த்துவதற்கான வங்கியின் முன்மொழிவை நிதி அமைச்சகம் அங்கீகரித்தது.
இந்த வளர்ச்சியைத் தொடர்ந்து, நேற்றைய வர்த்தகத்தில் AU Small Finance Bank பங்கு விலை என் எஸ் இ சந்தையில் 3.62 சதவீதம் அதிகரித்து, அதன் புதிய 52 வார உச்சத்தை (ரூ.1,007.25) அடைந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களாக பங்கு விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
ஒருங்கிணைந்த FDI கொள்கையின் கீழ் வெளிநாட்டு முதலீட்டிற்கான போதுமான அளவை பராமரிக்க அதிக வரம்பு உதவும் என்று வங்கி தெரிவித்துள்ளது. இந்த ஒப்புதல் அதன் செல்லுபடியாகும் தன்மைக்கு எந்த தடையும் இல்லை என்று கூறப்படுகிறது.
தற்போதைய விதிமுறைகளின் கீழ், தனியார் துறை வங்கிகளில் 49 சதவீதம் வரை அந்நிய முதலீடு தானியங்கி வழியிலேயே அனுமதிக்கப்படுகிறது. அதே நேரத்தில் 49 சதவீதம் முதல் 74 சதவீதம் வரையிலான திட்டங்களுக்கு அரசாங்க ஒப்புதல் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / JANAKI RAM