சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புவோர் வரும் 15 ஆம் தேதி முதல் விருப்ப மனுக்களை பெறலாம் -எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு
சென்னை, 11 டிசம்பர் (ஹி.ச.) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டமன்றப் பொதுத் தேர்தல்கள் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு, அதிமுக சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்புவோர் 15 ஆம் தேதி முதல் விருப்ப மனுக்களை பெறலாம் என அதிமுக பொதுச்
அதிமுக


சென்னை, 11 டிசம்பர் (ஹி.ச.)

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டமன்றப் பொதுத் தேர்தல்கள் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு, அதிமுக சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்புவோர் 15 ஆம் தேதி முதல் விருப்ப மனுக்களை பெறலாம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

வரும் 15 முதல் 23 ஆம் தேதி வரை அதிமுக தலைமை அலுவலகத்தில் தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்ப மனுக்கள் பெறலாம்.

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளாவை சேர்ந்த விருப்பமுள்ள அதிமுகவினர் படிவங்களைப் பெற்று, அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் தெளிவாகப் பூர்த்தி செய்து 23 ஆம் தேதிக்குள் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam