மகாகவி பாரதியார் ஆற்றிய அரும்பெரும் பணிகளை எந்நாளும் போற்றி வணங்கிடுவோம் - டிடிவி தினகரன்
சென்னை, 11 டிசம்பர் (ஹி.ச) மகாகவி பாரதியாரின் 144-வது பிறந்த நாள் இன்று (டிச 11) அனுஷ்டிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு பாரதியார் தமிழுக்கு ஆற்றிய அரும்பெரும் பணிகளை நினைவு கூர்ந்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்
மகாகவி பாரதியார் ஆற்றிய அரும்பெரும் பணிகளை எந்நாளும் போற்றி வணங்கிடுவோம் - டிடிவி தினகரன்


சென்னை, 11 டிசம்பர் (ஹி.ச)

மகாகவி பாரதியாரின் 144-வது பிறந்த நாள் இன்று (டிச 11) அனுஷ்டிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு பாரதியார் தமிழுக்கு ஆற்றிய அரும்பெரும் பணிகளை நினைவு கூர்ந்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மரியாதை செய்துள்ளார்.

அவர் எக்ஸ் தளத்தில் இன்று பதிவிட்டிருப்பதாவது,

இந்திய சுதந்திரப் போராட்டக் களத்தில் தனது உணர்ச்சிக்குக் கவிதைகளின் மூலம் நாட்டு மக்கள் மனதில் விடுதலை உணர்வை மேலோங்கச் செய்தவர், தன் வாழ்நாள் முழுவதையும் தமிழ்த் தொண்டுக்காக அர்ப்பணித்திட்ட புரட்சிக் கவிஞர் மகாகவி பாரதியார் அவர்களின் பிறந்த தினம் இன்று.

கவிஞராக, கட்டுரையாளராக, இதழியலாளராக, தேச பக்தராக, சமூக சீர்திருத்தவாதியாக, சுதந்திரப் போராட்ட வீரராக பல்வேறு பரிமாணங்களிலும் தாய்மொழியாம் தமிழுக்கும், தமிழ்ச் சமுதாயத்திற்கும் மகாகவி பாரதியார் ஆற்றிய அரும்பெரும் பணிகளை எந்நாளும் போற்றி வணங்கிடுவோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Hindusthan Samachar / vidya.b