Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 11 டிசம்பர் (ஹி.ச.)
அறிவாலயம் வந்தாலே கூட்டணி பேச்சுவார்த்தைக்காக தான் வருவோம் என்று தவறான செய்தியை அளிக்க வேண்டாம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன், முன்னாள் மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்ட குழுவினர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்தனர்.
சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன்,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழாவில் முதலமைச்சர் பங்கேற்க வேண்டும் என்று நேரில் சந்தித்து அழைப்பிதழ் கொடுத்ததாக தெரிவித்தார்.
அதே போல் சென்னையில் நடைபெற உள்ள இந்திய சோவியத் கலாச்சாரக் கழகத்தின் அகில இந்திய மாநாட்டில் யுத்தம் கூடாது அமைதி வேண்டும் என்று பல நாட்டின் தோழர்கள் பங்கேற்க உள்ளதாகவும், இதில் முதலமைச்சர் பங்கேற்க வேண்டும் என்று கூறியுள்தாகவும் தெரிவித்தார்.
மேலும், கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைப்பது குறித்து முறைப்படி அறிவிப்போம் என்றார்.
முன்னதாக பேட்டியளித்த முன்னாள் மாநில தலைவர் முத்தரசன்,
அறிவாலயம் வந்தாலே கூட்டணி பேச்சுவார்த்தைக்காக தான் வருவோம் என்று தவறான செய்தியை அளிக்க வேண்டாம் என்றும், மக்கள் சார்ந்த கோரிக்கைக்காவும் வருவோம் என்றும் தெரிவித்தார்.
Hindusthan Samachar / GOKILA arumugam