Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 11 டிசம்பர் (ஹி.ச.)
இந்தியா முழுவதும் இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவன விமான சேவைகள் கடந்த 8 நாட்களாக பெரிதும் பாதிக்கப்பட்டன.
சென்னையில் 9-வது நாளாக நேற்று சென்னையில் இருந்து சிங்கப்பூர், பாங்காக், பினாங்கு, குவைத், மும்பை, ஆமதாபாத், கொல்கத்தா, கவுகாத்தி, புவனேஸ்வர், விசாகப்பட்டினம், கொச்சி உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல வேண்டிய 33 இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானங்களும்,
சென்னைக்கு வரவேண்டிய 37 விமானங்களும் என 70 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
நிர்வாக காரணங்களுக்காக ரத்து என்று அறிவித்து இருந்தாலும் பயணிகள் முன்பதிவு ரத்து போன்ற காரணங்களால் விமான சேவையில் மாற்றம் ஏற்பட்டு இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் இன்று 10-வது நாளாக 24 புறப்பாடு, 12 வருகை என மொத்தம் 36 இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
நேற்று 70 இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், இன்று பாதியாக குறைந்துள்ளது.
Hindusthan Samachar / JANAKI RAM