Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 11 டிசம்பர் (ஹி.ச)
திறமையால் இங்கு மேனிலை சேர்வோம்;
தீய பண்டை இகழ்ச்சிகள் தேய்ப்போம் எனப் பாடிப் பெண்களின் உயர்வை வலியுறுத்திய மகாகவி பாரதியார் அவர்களின் பிறந்தநாளில் அவர்தம் பெருமையை போற்றி வணங்குவோம் என்று தமிழ்நாடு முதல்வர் முக.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது
நமது திராவிட மாடல் அரசு ஆட்சிக்கு வந்ததுமே பாட்டுக்கொரு புலவன் பாரதி மறைவெய்திய நூற்றாண்டினையொட்டி அவரது புகழ் பரப்பும் 14 சிறப்பு அறிவிப்புகளை வெளியிட்டுச் செயல்படுத்தி வருகிறோம்.
பெண்களின் உயர்கல்வியை உறுதிசெய்யும் நமது அரசின் திட்டத்துக்குப் பாரதியின் கவிதையில் இருந்தே புதுமைப்பெண் எனப் பெயரிட்டோம்.
பாரதியாரின் நினைவுநாளினை மகாகவி நாள் எனக் கடைப்பிடிக்கவும் அறிவிப்பு செய்தோம்.
சிந்தனை, சொல், செயல் என அனைத்திலும் புதுமையை நோக்கி விரைந்து தமிழ்ச்சமூகத்துக்குப் புதுநெறி காட்டிய புலவன் பாரதியின் பெருமையை எட்டுத்திக்கும் கொண்டு சேர்ப்போம் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ