ஊட்டி தொட்டபெட்டா மலைச்சிகரம் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு இன்றும் அனுமதி இல்லை - வனத்துறை அறிவிப்பு
நீலகிரி, 11 டிசம்பர் (ஹி.ச.) தமிழ்நாட்டில் கடல் மட்டத்தில் இருந்து 2,637 மீட்டர் உயரத்தில் மிக உயர்ந்த மலைச்சிகரமாக நீலகிரி மாவட்டம் ஊட்டி தொட்டபெட்டா விளங்குகிறது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் மூலம் செயல்பட்டு வரும் இந்த சுற்றுலா தலத்த
ஊட்டி  தொட்டபெட்டா மலைச்சிகரம் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு இன்றும் அனுமதி இல்லை   - வனத்துறை அறிவிப்பு


நீலகிரி, 11 டிசம்பர் (ஹி.ச.)

தமிழ்நாட்டில் கடல் மட்டத்தில் இருந்து 2,637 மீட்டர் உயரத்தில் மிக உயர்ந்த மலைச்சிகரமாக நீலகிரி மாவட்டம் ஊட்டி தொட்டபெட்டா விளங்குகிறது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் மூலம் செயல்பட்டு வரும் இந்த சுற்றுலா தலத்துக்கு வெளிநாடுகள், வெளிமாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

அங்குள்ள தொலைநோக்கி மூலம் ஊட்டி நகரம், ஏரி, கேத்தி பள்ளத்தாக்கு, குன்னூர் நகரம், அவலாஞ்சி அணை, மாநில எல்லை பகுதிகளை கண்டு ரசிக்கலாம். இந்த மலைச்சிகரத்தில் இருந்து பசுமை தவிழும் அடர்ந்த காடுகள், ஊட்டி நகரின் அழகை பார்வையிடலாம்.

தொட்டபெட்டா மலைச்சிகரத்திற்கு வார நாட்களில் தினமும் 3 ஆயிரம் பேரும், வார இறுதி மற்றும் விடுமுறை நாட்களில் தினமும் 7 ஆயிரம் பேரும் வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில் தொட்டபெட்டா சந்திப்பு முதல் தொட்டபெட்டா மலைச்சிகரம் வரை சாலை பராமரிப்பு பணி நடைபெற்று வருவதால் நேற்று (டிச 10) மூடப்பட்டது.

நேற்று தொடங்கிய சாலை பராமரிப்புப் பணி முடியாததால் இன்றும் (டிச 11) மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது.

சுற்றுலா பயணிகள் தொட்டபெட்டா மலைச்சிகரத்துக்கு வர வேண்டாம் என வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b