Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 11 டிசம்பர் (ஹி.ச.)
சென்னை கோடம்பாக்கம் அண்ணா பிரதான சாலையில் உள்ள டைரக்டர்ஸ் குடியிருப்பை சேர்ந்தவர் பொன்ராஜ் (37). பல முக்கிய பிரமுகர்களுக்கு ஆடிட்டராக பணிபுரிந்து வருகிறார்.
இவரது வீட்டுக்கு நேற்று
(டிச 10) 2வது நாளாக காலை 8 மணி அளவில் காரில் வந்த அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதேபோல, திருவொற்றியூரில் வசிக்கும் ஆடிட்டர் சேகர் மற்றும் துரைப்பாக்கத்தில் உள்ள ஆடிட்டர் ஆகியோரது வீடு உட்பட சென்னையில் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறையினர் நேற்று தீவிர சோதனை நடத்தினர்.
இந்த இடங்களில் துப்பாக்கி ஏந்திய மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சட்ட விரோத பணப் பரிமாற்ற புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடந்ததாக கூறப்படுகிறது.
சென்னை ஆர்.ஏ.புரத்தில், பெனிஸ் எனர்ஜி என்ற சோலார் பேனல் தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக தொழிலதிபர் பசுபதி கோபாலன் உள்ளார்.
இவர் சன் எடிசன் நிறுவனத்தை நடத்தி வந்தவர்.
இந்த நிலையில் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தொழிலதிபர் பசுபதி கோபாலன் வீட்டில் 3வது நாளாக இன்று (டிச 11) காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
கடந்த 2 நாட்களாக இந்தச் சோதனை நடந்து வரும் நிலையில், இன்று 3வது நாளாக இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் 10 இடங்கள், மும்பை உட்பட, நாடு முழுதும் 30 இடங்களில், வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
Hindusthan Samachar / vidya.b