தாய்மொழியையும் தாய்நாட்டையும் உயிரெனக் கொண்டிருந்த அவர்தம் பெரும் புகழை போற்றி வணங்குவோம்,பாரதியார் பிறந்தநாளில் இபிஎஸ் புகழாரம்!
சென்னை, 11 டிசம்பர் (ஹி.ச) புரட்சி கவிஞர் முண்டாசு கவிஞர் பாரதியாரின் பிறந்த நாளையொட்டி அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் புகழஞ்சலி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, பெண் விடுதலை,
Eps


சென்னை, 11 டிசம்பர் (ஹி.ச)

புரட்சி கவிஞர் முண்டாசு கவிஞர் பாரதியாரின் பிறந்த நாளையொட்டி அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் புகழஞ்சலி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,

பெண் விடுதலை, சமத்துவம், தேசிய உணர்வு, மொழிப்பற்று ஆகிய உயர்ந்த கொள்கைகளை தனது எழுத்துக்களால் மக்கள் மனங்களில் விதைத்து, புதிய சிந்தனைகளுக்கு ஒளியூட்டிய விடுதலைச் சிந்தனையாளர்.

தாய்மொழியான தமிழின் மகத்துவத்தை உலகம் அறியச் செய்த முண்டாசுக் கவிஞர், மகாகவி பாரதியார் அவர்களின் பிறந்த நாளில், தாய்மொழியையும் தாய்நாட்டையும் உயிரெனக் கொண்டிருந்த அவர்தம் பெரும் புகழை போற்றி வணங்குகிறேன்.

Hindusthan Samachar / P YUVARAJ